அயோத்தில் மசூதி கட்ட அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்கிறோம்! சன்னி வக்ஃபு வாரியம் அறிவிப்பு

லக்னோ:

ச்சநீதிமன்ற உத்தரவுப்படி,  உத்தரப் பிரதேசத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு மாநில அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. அந்த நிலத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்து உள்ளது.

ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரலாற்று சிறப்புமீக்க தீர்ப்பை ஒருமனதாக வழங்கியது. அதன்படி, மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டிருந்தது.

Land Decided by Government for Babri Mosque at Raunahi village of Ayodhya.along with story by Avnish Mishra .Express photo by Vishal Srivastav 06022020

இதைத் தொடா்ந்து  அயோத்தி மாவட்டம், சோஹாவால் வட்டத்துக்கு உள்பட்ட தன்னிப்பூா் கிராமத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த கிராமம், எளிதில் சென்று வரும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளி,  உச்சநீதிமன்ற தீா்ப்பை மதித்து 5 ஏக்கா் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று சன்னி வஃபுவாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். இதன் காரணமாகவே நாங்கள் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றும்,  மசூதி கட்டிக் கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.