புதுடெல்லி:
த்தரபிரதேசம் உள்பட 5  மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2017ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது  மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
election-commission
நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் தேர்தல் நடைபெறாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிப்ரவரி இறுதியில் அல்லது மார்சில் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பஞ்சாப், கோவா, உத்தரகாண்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்  மற்றும் மணிப்பூர், உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
உத்தரபிரசேத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உ.பியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதாவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளும், ஆட்சியை பிடித்த ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான  சிரோமணி அகாலிதளம் -பாஜ ஆகியவை காங்கிரஸ் கட்சியிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன.  மற்றொரு புறம் ஆம்ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டி யிடுகிறது. எனவே போட்டிகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது.
கோவாவில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டிய சூழலில் உள்ளது. தற்போது கோவாவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே உள்ள தண்ணீர் பிரச்சினை மேலும், காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளின் கடுமையான அரசியல் நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலை பாரதியஜனதாவுக்கு ஏற்பட்டு உள்ளது.
மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும் பாரதியஜனதாவை எதிர்த்து போராடும் சூழ்நிலையே உள்ளது.