க்னோ

த்தரப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் 5 பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்ப பெற்றுள்ளனர்.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன.  முன்பு இந்த உறுப்பினர்களில் 3 பேர் பாஜக, 4 சமாஜ்வாதி, 2 பகுஜன் சமாஜ் மற்றும் ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்தனர்.  தற்போது இந்த 10 இடங்களுக்கு  11 பேர் வேட்பு மனு செய்துள்ளதால் நவம்பர் 9 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் 8 பாஜகவினர் போட்டியிட உள்ளனர்.  இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் ஒருவர் ஆவார்.  இங்கு பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை உள்ளதால் இந்த 8 பேரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.  மீதமுள்ள இடங்களில் ஒரு இடத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ராம்ஜி கவுதம் நிறுத்தப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாத போதிலும் பாஜக அல்லாதோர் ஆதரவு கிடைக்கும் என நம்பப்பட்டது.   ராம்ஜி கவுதம் வேட்பு மனுவில் அவரை முன் மொழிந்து 10 பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்து காணப்பட்டது.   இந்நிலையில் இதில் 5 பேர் பல்டி அடித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் அஸ்லாம் ரைனி,, அஸ்லாம் சவுத்ரி, முஜ்தபா சித்திகி, ஹகிம் லால் மற்றும் ஹர்கோவின் பார்கவா ஆகியோர் தங்களது கையெழுத்தை போர்ஜரி செய்து வேட்புமனுவில் இட்டுள்ளதாக எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர்.   இதன் மூலம் இவர்கள் தங்கள் ஆதரவை மாற்றி உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த புகார் மீது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.