அணிமாற 5 கோடி ரூபாய்!: ஈ.பி.எஸ்., தினகரன் மீது சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடி:

ணி மாறுவதற்காக ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசுவதாக சசி அணி மீது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த சண்முகநாதன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகநாதன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பக்கம்தான் இருக்கிறார்கள். சசிகலா, தினகரன் குடும்பத்தினர் அ.தி.மு.கவைவிட்டு விலகி நிற்க வேண்டும் என்றே தொண்டர்கள் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியினர் என்னிடம் பேரம்பேசுகின்றனர்.

ஓ.பி.எஸ்ஸைவிட்டு அணிமாறி வந்தால் 5 கோடி ரூபாய் தருவதாக கூறுகிறார்கள்” என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.

சமீபத்தில்  எம்எல்ஏ ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.