தீண்டாமையில் இருந்து தப்பிக்க 5 தலித் குடும்பத்தினர் பௌத்த மதத்திற்கு மாற்றம்

உத்திர்பிரேதசத்தில் 5 தலித் குடும்பங்கள் தீண்டாமையில் இருந்து தப்பிப்பதற்காக பௌத்த மதத்திற்கு மாறியுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தையில் உள்ள சிங்கவாலி அஹிர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தீண்டாமை மற்றும் பழங்குடியின இந்துக்களின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்கும் விதமாக சிலர் மதம் மாறி வருகின்றனர். 5 தலித் குடும்பங்கள் பௌத்த மதத்திற்கு மாறியது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
buddism
இதேபோல் 16 பேர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மதம் மாறும் சம்பவம் பௌத்தர்களால் கூடாரம் அமைத்து நடைபெற்றது. மிகப்பெரிய மேடை அமைத்து பௌத்தர்களின் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த மதம் மாறும் நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். இந்து மதத்தையும், சிலை வழிப்பாட்டையும் விமர்சித்த சிலர் தீண்டாமையையும், மேலாதிக்கத்தையும் மதமற்றத்திற்கு காரணம் காட்டினர்.

பௌத்த குரு மஹாராஜ் பிரியந்திஸ் பாண்டே மதம் மாறும் விழாவை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதுப்போன்ற சம்பவம் நடக்கவில்லை என்று கருத்து தெரிவித்த போலீசார் விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.