பிறந்து 5நாளே ஆன பச்சிளங்குழந்தைக்கு கொரோனா…

சென்னை:

மிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2057 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  12வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 121 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உளளது.

நேற்றைய நிலவரப்படி  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிப்பு என்பது நேற்று 111 ஆக இருந்தது. இன்று மேலும் 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பாதிப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து ள்ளது.

இன்றைய பாதிப்புகுள்ளான குழந்தைகளில், பிறந்து 7 மாதங்கள் ஆன குழந்தை-1,  ஒரு வயது ஆண் குழந்தை-1.   ஒன்றரை  வயது பெண்குழந்தை-1 , 2 வயது பெண் குழந்தை -1, 5 வயது பெண் குழந்தை -1, 8 வயது பெண் குழந்தை -2, , 9 வயது ஆண் குழந்தை- 1,  11 வயது ஆண் குழந்தை -1,. மற்றும் 12 வயது பெண் குழந்தை-1  ஆகிய 10 பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்றைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் மிகவும் சோகமான அதிர்ச்சி தகவல் என்னவென்றால் செங்கல்பட்டில் பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்த தகவல் தெரிவித்து உள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.