டில்லி:

5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இந்னோனேசியா புறப்பட்டு சென்றார்.

இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 3 நாட்கள் இந்தோனேசியாவில் தங்கும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபருடன் பல்வேறு கட்ட பேச்ச வார்த்தை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து வரும் ஜூன் 1ந்தேதி  சிங்கப்பூர் செல்கிறார். அங்கு நடைபெறும் ஷான்கிரி- லா மாநாட்டில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்

இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி தனது முகப்புத்தக்கதில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷான்கிரி லா மாநாட்டில்,  ஆஸ்திரேலியா, புருனே உள்ளிட்ட ஆசியா -பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 22 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த அமைப்பின் மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.