டில்லி : அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஐவர் மரணம்

டில்லி

டில்லியில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 4 சிறுவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் அசோக் விகார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.    அந்த கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.   அந்த கட்டிடத்தில் வசித்து வந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.    உடனடியாக இது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

அங்கு மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.    அப்போது இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்த ஒரு பெண் மற்றும் 4 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.    அத்துடன் படுகாயம் அடைந்த நிலையில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.   அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி தொட்ர்ந்து நடை பெற்று வருகிறது.    இடிந்து விழுந்த கட்டிடம் சுமார் 20 வருடங்கள் பழமையானது எனவும் அதனால் வலிமையற்று இடிந்து விழுந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.