கோவையில் பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம்…

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் சோமனூர் பஸ் நிலையக் கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம் அடைந்தனர்.

 

கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ளது சோமனூர்.  இங்கு பஸ் நிலையம் ஒன்று உள்ளது.  சமீப காலமாக பெய்து வரும் மழையினால் இந்த பஸ் நிலையத்தின் மேற்கூரை பழுதடைந்து பல இடங்களில் விரிசலுடன் காணப்பட்டது.  இன்று மதியம் பஸ் வரவை எதிர்பார்த்து பலர் காத்திருந்தனர்.  அங்கு வந்த நகர பேருந்து ஒன்று கூரை மீது மோதி உள்ளது.  இதனால் அந்தக் கூரை இடிந்து கீழே விழுந்தது.

இந்த இடிபாடுகளில் அங்கு காத்திருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.  அதில் 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சிலர் காயமடைந்துள்ளனர்.  காயம் அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை.  மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளபடியால், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து அந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.