உத்திரப் பிரதேசத்தில் ரெயில் விபத்து : ஐவர் மரணம்

ர்சந்த்பூர்
. பி. மாநிலத்தில் ஹர்சந்த்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரு விரைவு ரெயில் தடம் புரண்டதில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையம் ஹர்சந்த்பூர்.
இன்று காலை இந்த ரெயில் நிலையம் வழியாக செல்லும் நியூ பராக்கா விரைவு ரெயிலில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் பணிய்னர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்க்கான காரணம் மற்றும் விவரங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.