Random image

டில்லி : செப்டிக் டாங்க் சுத்தம் செய்த ஐவர் விஷவாயு தாக்கி மரணம்

டில்லி

மேற்கு டில்லி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த ஐந்து பேர் விஷ வாயு மரணம் அடைந்துள்ளனர்.

மேற்கு டில்லி பகுதியில் உள்ள மோதிநகரில் டி எல் எஃப் க்கு சொந்தமான குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது.   இந்த வளாகத்தின் பராமரிப்பை ஜே எல் எல் நிறுவனம் கவனித்து வருகிறது.   இந்த பராமரிப்பு நிறுவனப் பணியாளர்கள் இந்த வளாகத்தின் அனைத்து சுத்திகரிக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றனர்.

இந்த வளாகத்தின் கீழ் தரைப் பகுதியில் (BASEMENT FLOOR) அனைத்து குடியிருப்புகளுக்குமான கழிவு நீர் தொட்டி (செப்டிக் டாங்க்) அமைந்துள்ளது.   இந்த தொட்டி ஊழியர்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.    நேற்று மாலை சுமார் 30 அடி ஆழமுள்ள இந்த தொட்டியை ஐந்து பேர் சுத்தம் செய்ய இறங்கினார்கள்.

ஆனால் அந்த தொட்டியில் விஷ வாயு நிரம்பி இருந்ததால் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.    மரணம் அடைந்தவர்கள் அனைவ்ரும் சுமார் 18 முதல்30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.   மரணம் அடைந்தவர்கள்  விஷால், சர்ஃபராஸ், பங்கஜ், ராஜா மற்றும் உமேஷ் ஆவார்கள்.    இந்த ஐவரும் அந்த வளாகத்தில் அமைந்திருக்கும் பணியாளர்கள்  குடியிருப்பில் வசித்து வருபவர்கள்

அந்த ஐவருக்கும் சரியான பாதுகாப்பு உபகரணங்களை டி எல் எஃப் மற்றும் ஜே எல் எல் நிறுவனங்கள் வழங்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.  இது குறித்து டி எல் எஃப் நிறுவனத்தின் அந்த வளாக பிரதிநிதி, “இந்த வளாகத்தின் பராமரிப்பின் முழுப் பொறுப்பும் ஜே எல் எல் நிறுவனத்தை சார்ந்தது. எனவே அவர்களிடம் தான் இது குறித்து கேட்டறிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜே எல் எல் நிறுவனம் இது குறித்து எந்த ஒரு தகவலும் கூற மறுத்துள்ளது.

You may have missed