5அரசு மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி

சென்னை:

மிழகத்தில்  5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் கே.வனிதா மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சாரதா, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை டீன் ஏ.எல்.மீனாட்சி சுந்தரம், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பி.வசந்தி, பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எஸ்.பாலசுப்பிர மணியன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயியல் துறை பேராசிரியர் சி.லலிதா, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு துறை பேராசிரியர் கே.வேணி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் பி.சந்திரிகா, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.