சூரத்

ள்ள நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று வடோதராவில் அபிஷே சுர்வே மற்றும் சுமித் நம்பியார் ஆகிய 32 வயது இளைஞர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டை வைத்து பொருட்களை வாங்க முயற்சித்துள்ளன்ர்.  இவர்கள் அப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.   காவல்துறையினர் அபிஷேக் இடம் இருந்து 152  கள்ள நோட்டுக்களையும்  சுமித் இடம் இருந்து 23 நோட்டுக்களையும் கைப்ப்பற்றி உள்ளனர்.

இவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.   அப்போது அவர்கள் இந்த நோட்டுக்களை தாங்கள் சூரத் நகரைச் சேர்ந்தவர்கள் எனவும்  இந்த கள்ள நோட்டுக்களை சூரத் நகரைச் சேர்ந்த அபிஷேக் மங்குகியா என்னும் 23 வயது இளைஞரிடம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளனர்.    காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு காவல்துறை சூரத் நகருக்கு விரைந்தனர்.

அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் கள்ள நோட்டுக்களைத் தனது இல்லத்தில் அச்சடித்த சஞ்சய் பர்மார் என்னும் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.  அவர் கொடுத்த தகவலை வைத்து இந்த நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட ஆசிஷ் சுரானி, குல்தீர்ப் ராவல், அபிஷேக் மங்குகியா, மற்றும் விஷால் சுரானி ஆகிய சூரத் நகர இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஐந்து பேரும் 22 முதல் 25 வயதான இளைஞர்கள் ஆகும்.  இவர்களிடம் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவரும் சூரத் நகரில் வைரம் மெருகேற்றும் பணியைச் செய்து வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.  தற்போது வைர விற்பனை சரிவால் வேலை இழந்துள்ள இவர்கள் கள்ள நோட்டு அடிப்பதைக் குறித்து யு டியுப் வீடியோ மூலம் தெரிந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களில் சஞ்சய் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்.  மற்ற அனைவரும் எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள் ஆவார்கள்.  எனவே வேறு பணி எதுவும் கிடைக்காத நிலையில்  கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட ஆரம்பித்துள்ளனர்.   சஞ்சய் இல்லத்தில் இருந்து 2 அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் 91 கட்டு ரூ.100 நோட்டுக்களும், 14 கட்டுக்கள் ரூ.500 நோட்டுக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.  இதுவரை ரு.160000 வரை இவர்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளனர்.   கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.