தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு!

சென்னை: தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
தமிழகஅரசு துறையில் உயர்அதிகாரிகளாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர்கள், பணி மூப்பு அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி,   தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்ற வரும்  5பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மத்தியஅரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமித்து  தமிழகஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

You may have missed