Random image

உத்தரகாண்டில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி

டேராடூன்:

த்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  5 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, செயிங்டா கதேரா அருகில்  கருங்கெட் பகுதியில்  ரம்நகர்-பத்ரிநாத் சாலையில்  சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

இந்த விபத்தில் பஸ் பலமுறை உருண்டு விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இறந்தவர்களில் பஸ் நடத்துனம் அடகுவார்.  மேலும் 21 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட நீதிபதியும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் டிரைவர் கண்டக்டரையும் சேர்த்து 26 பயணிகள் பயணம் செய்தாக கூறப்படு கிறது. பேருந்தின் பிரேக் பெயிலியர் ஆனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.