சென்னை:  விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி நிதி திட்டமான பிஎம்-கிஸான் திட்டத்தில் 5 லட்சம் போலி பயனர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, அதிமுக அரசு மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் திட்டத்தின்படி, ஏழை விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், தமிழ்நாட்டில்  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது. அதன்படி 14 மாவட்ட்ங்களில் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்திப் சிங் பேடி உத்தரவிட்டார். இதில் பல அரசுஅதிகாரிகள் உள்பட ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த மாபெரும் ஊழலுக்கு அதிமுக அரசும் உடந்தை என கனிமொழி டிவிட்டியுள்ளார்.

அவரது பதிவில்,  பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா ?

5லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது.

இவ்வாறு கூறியுள்ளார்.