டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

மியான்மர்  (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் 13 லட்சம் பேர்  வசித்தனர். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இங்கு வசித்து வந்தாலும், மியான்மர் அரசு இவர்களை தங்கள் நாட்டு குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மக்களை பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்தவர்களாகவே பார்க்கிறது. சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில்கூட, இந்த மக்களை தங்கள் நாட்டு பிரஜையாக சேர்க்கவில்லை.

இந்த மக்கள், அரசு மற்றும் பர்மிய அடிப்படைவாதிகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உயிருக்கு  ஆபத்தும் ஏற்படுகிறது.

பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த மக்கள், வேறு வழியி்ன்றி அகதிகளாக பிற நாடுகளுக்கு குடிபெயர்கிறார்கள். குடிபெயர்ந்த பிறகும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் இந்த மக்கள்.

இப்படி அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை நான்கரை லட்சத்திலிருந்து சுமார் ஐந்து லட்சத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் அறிக்கையின் படி,  இந்த அகதி மக்களில் 2,76,200 பேர் வங்கதேசத்தில் வசிக்கின்றனர். அதற்கு அடுத்து தாய்லாந்தில் 102,600 அகதிகளும், மலேசியாவில் 87,000 அகதிகளும், இந்தியாவில் 15,600 அகதிகளும் தஞ்சமடைந்துள்ளதாக  ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.துமட்டுமின்றி உலகெங்கும் 65.6 மில்லியன் பேர் பல்வேறு காரணங்களுக்காக கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Nearly a half-million Rohingya muslim refugees says UN report.