உ.பி. மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் :ஃபெயில்”

லக்னோ

இந்தி பேசும் மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் தேர்ச்சி பெறவில்லை

உத்தர பிரதேச மாநிலத்தின் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் இந்தியை மொழிப்பாடமாக எடுத்துக் கொண்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

அதில் 23.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்

கிட்டத்தட்ட 20% மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இந்தி பேசும் மாநிலத்திலேயே 5.23 லட்சம் மாணவர்கள் இந்தியில் தேர்ச்சி பெறாதது அதிரிச்சியூட்டுவது என உ.பி. யின் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்ற மொழிகளை மொழிப்பாடமாக எடுத்துக் கொண்ட மாணவர்கள் இந்தி மொழி மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு முன் 2012ஆம் வருடம் 35 லட்சம் மாணவர்களில் 3 லட்சம் பேர் இந்தியில் தேர்ச்சி பெறவில்லை.

அதே போல் 2011ஆம் வருடம் 33 லட்சம் மாணவர்களில் 4.5 லட்சம் பேர் இந்தியில் தேர்ச்சி பெறவில்லை.

தாய் மொழிப் பாடத்திலேயே மாணவர்கள் தேர்வு பெறாதது கண்டனத்துக்குரியது என ஆசிரியர்கள் பலரும் கருத்து தெரிவித்துளனர்