பாம்பு என நினைத்து கரும்புக் கழிவுக்கு தீ வைத்ததில் 4 சிறுத்தைக் குட்டிகள் இறப்பு

புனே:

பாம்புகள் என்று நினைத்து கரும்புக் கழிவுகளுக்கு தீ வைத்ததில், 5 சிறுத்தைக் குட்டிகள் கருகி இறந்தன.


மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவில் கரும்புத் தோப்பு உள்ளது.
அதற்குள் பாம்புகள் இருப்பதாகக் கருதி, கரும்புக் கழிவுகளை போட்டு விவசாயிகள் தீ வைத்துள்ளனர்.

ஆனால் உள்ளே இருந்த பிறந்து 10 நாட்களான 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக இறந்தன.
கரும்பு அறுவடைக்கும் முன்பு பழைய கழிவுகளை விவசாயிகள் தீவைத்து கொளுத்துவது வழக்கம் என்று தெரிகிறது.

அப்போது தாய் சிறுத்தை இரை தேடப் போயிருந்தது. திரும்பி வந்ததும் கோபத்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பாதுகாப்புப் பணியில் கூடுதலாக வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கரும்புத் தோப்பு அடர்ந்து இருப்பதால், சிறுத்தைகள் குட்டிகளை ஈனவும், அதனை பாதுகாப்பாக வளர்க்கவும் ஆர்வம் காட்டுகின்றன.
அவை அறுவடை காலத்தில் வந்ததால் இந்த சம்பவம் நடந்துவிட்டது என்கின்றனர் விவசாயிகள்.