சென்னையில் கொரானாவை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு…

சென்னை:
சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார்.
சென்னையில்  நேற்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து,   கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையாறு மண்டலங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்து உள்ளது. அந்த குழுவில்,  அமைச்சர்கள்  ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்,விஜயபாஸ்கர்  இடம்பெற்றுள்ளனர்.

வடசென்னை பகுதிகளான மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடசென்னை பகுதிகளான  திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சென்னை பகுதியான தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.