Random image

திருவள்ளுர் : 5 மாத பெண் குழந்தையின் கழுத்து அறுப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவடம் பாண்டூரில் 5 மாத பெண் குழந்தை அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் சென்று கழுத்து மற்றும் காதை அறுத்து தெருவில் வீசப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் பாண்டூர்.  இந்த கிராமத்தை சேர்ந்த 30 வயதான ராபின் ட்பவர் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார்.   அவரது மனைவி லிபியா (வயது 25) மற்றும் மகள்கள் இனியா (வயது 3) மற்றும் குஷி (5 மாதம்) ஆகியோருடன் ராபின் வசித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமைஅன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்த லிபியா காற்றுக்காக கதைவை திறந்து வைத்து விட்டு தானும் தூங்கி உள்ளார்.   வீட்டில் அவருடன் ராபின் தாய், தந்தை, தம்பி மற்றும் தம்பி மனைவியும் இருந்துள்ளனர்.    சுமார் 4.30 மணிக்கு விழித்துப் பார்த்த லிபியா தனது அருகில் தூங்கிய குழந்தையைக் காணாமல் அதிர்ந்துள்ளார்.

அனைவரும் குழந்தையைத் தேடத் தொடங்கினர்.  அப்போது குழந்தை தெருவில் கழுத்து மற்றும் காது அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.   லிபியா மற்றும் குடும்பத்தினர் திருவள்ளுவர் தலைமை அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   கழுத்துப் பகுதியில் 8 தையல்கள் போடப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் காவல் நிலையக் காவலர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.