சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் மரணமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சிபிஐ விராசணைக்கு உத்தரவிட, பின்னர் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக 5 பேரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, கைதான மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், ஆகியோரையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.