டில்லி உயர்நீதி மன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை
டில்லி:
டில்லி உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் பெயர்களை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
காலியாக உள்ள நீதிபதிகளின் பணி இடங்களை நிரப்பும் வகையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளை நியமிக்க, உச்சநீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் 5 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
நீதிபதிகளான, ஜோதி சிங், பர்தீக் ஜலன், அனுப் ஜெய்ராம் பகம்பானி, சஞ்சீவ் நரூலா, மனோஜ்குமார் ஓரி ஆகியோர்களின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் பரிந்துரைத்த 9 பெயர்களில் 5 பெயர்களை கொலிஜியம் உறுதி செய்துள்ளது.
கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது.