வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள 5 சமூக ஆர்வலர்கள் வழக்கு: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

--

டில்லி:

பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள 5 சமூக ஆர்வலர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில்  லையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர்.  வன்முறையை தூண்டும் விததத்தில் பேசியதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டி மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்து, அது தொடர்பாக இடதுசாரி சமூக ஆர்வலர்களான  தா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் உள்பட 5 பேகைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 153 ஏ, 505 (1) பி, 117, 120 பி, 13, 16, 18, 20, 38, 39, 40 கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும், இவர்களளின் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.  அதன்பேரில்,  ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவ் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டி மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் கடும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கைது நடவடிக்கையை ரத்துக்கோரி,  ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்பட 5 பேர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்தது.  பல முறை காரசாரமாக நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதி கன்வில்கர் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில், மனித உரிமை ஆர்வர்லர்கள் கைது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. விசாரணை நீதிமன்றத்தை அனுகி மனுதாரர்கள் கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், 5 பேரின் வீட்டுக்காவலை 4 வாரங்களுக்கு நீட்டித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.