தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

--

டில்லி:

ட்டமன்ற பதவி காலம் முடிய உள்ள 4 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் தெலுங்கான மாநில சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சட்டமன்ற பதவி காலம் முடிய உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய  நான்கு மாநிலங்களின் தேர்தல் மற்றும்,   சமீபத்தில் ஆட்சி கலைக்கப்பட்ட தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்  தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்  காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில்,  மழை காரணமாக தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் கூறி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12ந்தேதி அன்று 18 தொகுதிகளுக்கும், நவம்பர் 20ந்தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

நவம்பர் 28ந்தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

டிசம்பர் 7ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

மிசோரம் மாநிலத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

நவம்பர் 28ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கானா மாநில தேர்தல் ஒரே கட்டமாக டிசம்பர் 7ந்தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி டைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,தேர்தல் நடத்தை உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது