5 மாநில தேர்தல் முடிவு: 8.30 மணி முன்னிலை நிலவரம்!

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணி அளவில் தொடங்கியது.

பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உ.பி. மாநில  15வது சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் 7 கட்டங்களாக ஏற்கனவே நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  78 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் உ.பி.யில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிய வரும்…

உ.பி.யில் 34 இடங்களில்  பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி பார்ட்டி 24 இடங்களிலும், பிஎஸ்பி 17 இங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பஞ்சாபில் 15 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

மணிப்பூரில் காங்கிரஸ், பாஜக இரண்டு அணிகளும் சரிசமமாக வந்துகொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.