5மாநில தேர்தல்: மக்கள் மோடிக்கு பாடம் புகட்டுவார்கள்! சீத்தாராம் யெச்சூரி

திருவனந்தபுரம்,

5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாரதியஜனதாவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் மோடி மக்களை ஏமாற்றினார். ஆனால், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவரை ஏமாற்றி பாடம் புகட்டுவார்கள்  என்று  மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு  தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கேரள மாநிலம் கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்பட பட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது,

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனததா வெற்றி பெற்று மோடி பிரதமராகி விட்டார். ஆனால்,  அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை.

ரூபாய் நோட்டு பிரச்சனையில் பொதுமக்களை மோடி மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார். மக்கள் இங்கே பணத்துக்காக அல்லாடிக்கொண்டிருக்கும்போது, அவர் உலகம் சுற்றி வருகிறார்.

தற்போது நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கும்  உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடம் கிடைக்கும் என்று அவரது கட்சியினர் கனவு காண் கனிறனர்..

ஆனால் இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மக்கள் ஓட்டு போடுவார்கள். மக்களை மோடி ஏமாற்றினார். அதனால் இந்த தேர்தலில் மக்கள் அவரை ஏமாற்றுவார்கள். அவருக்கு பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

You may have missed