டில்லி

மாடு வெட்ட தடை விதிக்கப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கர்னாடகா மற்றும் கேரளா உட்பட ஐந்து மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு பசு, எருமை உட்பட அனைத்து மாடுகளையும் இறைச்சிக்காக வெட்ட மத்திய அரசு தடை விதித்தது.   பின்பு அதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளப்பியதால் அந்த சட்டத்தில் சில மாறுதல்கள் செய்யபட்டது.      இந்த சட்டத்தின் மூலம் அனைத்து மாடுகளும் விற்பனை செய்யக் கூடாது என சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.   இந்தப் புதிய சட்டத்துக்க்கு கேரளா, கர்னாடகா, மிஜோரம், உத்தர்காண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.   அந்த வழக்கில் அனைத்து மாநிலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.   அதற்கிணங்க அனைத்து மாநிலங்களும் தங்கள் பதிலை அளித்துள்ளன.   அவற்றில் கர்னாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

கேரள அரசு அளித்துள்ள விரிவான பதிலில், “இந்தச் சட்டம் சட்ட பூர்வமாக எவ்வாறு சரி ஆகும்?   இதனால் மிருக வளர்ப்பு, பால் பொருட்கள் தொழில், மாமிச விற்பனைத் தொழில் ஆகியவை பெரிதும் பதிக்கப்படும்.   மேலும் மாடுகள் விற்பனை நிறுத்தப் பட்டால் மாமிச உற்பத்தி அடியோடு நின்று போகும்.   அதனால் மாமிசம் சாப்பிடுபவர்கள் உணவின்மை,  மற்றும் சத்துக்குறைவால் பாதிக்கப்படுவார்கள்.   மேலும் விவசாயிகள் இந்த சட்டத்தினால் கடும் துயரடைவார்கள்” என குறிப்பிட்டுள்ளாது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது. அம்மாநில அரசு, “பசுவை பாதுகாக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.   ஆனால் எருமை உட்பட மற்ற மாடுகளை இந்த சட்டத்தில் சேர்த்திருப்பது தவறானது.”  எனக் கூறி உள்ளது.   இதே போல கர்னாடகா உட்பட பல மாநிலங்களும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளன.

இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.