பா.ஜ.க.வுக்கு பின்னடைவு!: நடிகர் ரஜினி விமர்சனம்

5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவது தெரிகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்குத் துவங்கியது.

ஆரம்பம் முதலே தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி இம் மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

இம்மாநிலங்களில்  பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவுகள் பாஜகவினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து, “தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.