காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை: 5 பயங்கரவாதிகள் என்கவுண்டர்!

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அங்கு தொடர்ந்து துப்பாக்கி சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுத் தள்ளினர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், ஏகே.47 ரக இயந்திர துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் மறைந்து இருக்கிறார்களா என  தேடுதல் வேட்டைதொடர்ந்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 5 terrorists killed in encounter in J&K's Shopian
-=-