சென்னையில் 5டன் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை:

சென்னை  புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்காவை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்தது தொடர்பாக சிபிஐ அதிரடியாக பல இடங்களில் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் குட்கா பதுக்கி வைப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து,  புறநகர் பகுதியான  சென்னை நெமிலிச்சேரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் பலனாக 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.