டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி ரயில்களில் தீவிர சோதனை

புது டெல்லி:

மாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி 5 ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் சோதனை செய்யப்பட்டனர்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இங்கு கூடியிருந்தவர்களில், 300க்கும் அதிகமானோரிடம் நேற்று முன்தினம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், நேற்று அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அந்த கட்டடத்துக்கு, ‘சீல்’ வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 13 முதல் மார்ச் 19 வரையிலான காலகட்டத்தில் ஆந்திராவுக்கு சென்ற டொரொண்டோ எக்ஸ்பிரஸ், சென்னைக்கு சென்ற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், நியூடெல்லி-ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் ஏபி சம்பார்க் கிரட்னி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரயிலும் ஆயிரம் முதல் 2.000 பயணிகளுடன் பயணித்துள்ளது. இதனால், அனைத்து பயணிகளையும் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர்.