டில்லியில் பயங்கரம்: கேஸ் சிலிண்டர் வெடித்து 5வயது குழந்தை உள்பட 7 பேர் பலி

டில்லி:

லைநக்ர டில்லியில் உள்ள தொழிற்சாலையில்  கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி  5வயது குழந்தை உள்பட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி சுதர்சன் பார்க் பகுதியில் உள்ள மோதி நகரில் செயல்பட்டு வரும் மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுதர்சன் பார்க் பகுதியில் செயல்பட்டு தனியாருக்கு சொந்தமான  மின்விசிறி தயாரிப்பு ஆலையில், திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக  கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள ஆச்சார்யா பிக்சு மருத்துவமனைகளில் அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.