பெங்களூரு:
டந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது பாட்டித் தாத்தாவுடன்  சில நாட்கள் தங்க விரும்பி அவர்களுடன், தாயைப் பிரிந்து  டெல்லி சென்ற சிறுவன், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக  டெல்லியிலேயே சிக்கிய நிலையில், இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியதும், முதல்  விமானத்தில் தனியாகப் பயணித்து பெங்களூரு வந்தடைந்துள்ளான். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாகக் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை இங்கு 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவை பல கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா  ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக டெல்லி சென்றிருந்த பெங்களூருவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விஹான் சர்மா,  ஊரடங்கால், தனது வீட்டுக்கு திரும்ப முடியாமல்  அங்கேயே சிக்கிக் கொண்டான். கடந்த 3 மாதங்களாக தாயை பிரிந்து வாடிய அந்த சிறுவன், இன்று  உள்நாட்ட விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதும், முதல்ஆளாக விமானத்தில் தன்னந்தியாக பயணித்து, பெங்களூரு வந்தடைந்தனர். அந்தசிறுவனுக்கு விமான நிறுவனம் சிறப்பு வசதி செய்து கொடுத்திருந்தது.
இன்று காலை 9 மணிக்கு கெம்பகௌடா விமான நிலையம் வந்த சிறுவனை அவரின் தாய், வந்து அழைத்துச் சென்றார்.
விமானத்தில் பயணித்த சிறுவன்,  மாஸ்க் அணிந்திருந்ததுடன், கையில் கிளவுஸ், பயண பாஸ், சிறப்பு வசதிக்கான அடையாள அட்டை உடன் ஆரோக்கிய சேது செயலி உடன் கூடிய மொபைல் மூலம் அசால்காக கர்நாடகமாக மாநில விமான நிலையத்தில் வந்திறங்கினான்… அந்தச் சிறுவனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து குறிய சிறுவன் விஹானின் தாய்,  “எனது 5 வயது மகன் விஹான் சர்மா டெல்லியில் இருந்து தனியாகப் பயணம் செய்துள்ளார், அவர் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளார், அவனை சந்திப்பதில் மிக்க மகிர்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.