புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தூதரகத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகளான அச்சிறுமி, ஊழியர்களின் குடியிருப்புக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அண்டை வீட்டுக்காரரால், அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என்று டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஈஷ் சிங்கால் சி.என்.என் இடம் தெரிவித்தார்.

பாலியல் வன்புணர்வுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்”யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள 25 வயது நிரம்பிய அந்த நபரை தயக்கம் சிறிதுமின்றி அந்த சிறுமியால் அடையாளம் காட்ட முடிந்ததால் இதில் சந்தேகத்திற்கு இடமேதுமில்லையென சிங்கால் மேலும் கூறினார்.

இது குறித்து சிஎன்என் இடம் அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் கூறும்போது “தூதரக வளாகத்தில் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட்து அறிந்து அமெரிக்கத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளானது” என்றும் “ தூதரகம் துரித நடவடிக்கையில் எடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் செய்தது” எனவும் கூறினார்.

விசாரணை தொடங்கியுள்ளது. இன்னும் நீதிமன்ற விசாரணைக்கான நாள் குறிப்பிடப்படவில்லை.

2012 இல் டெல்லியில் நடைபெற்ற கூட்டு வன்புணர்வு உலக அளவில் கண்டனத்தைப் பெற்று கவனகுவிப்பைப் பெற்றதும், இந்தியாவின் தலைநகரின் அந்த பெண்ணைப் பற்றிய நியாபகங்கள் அகலாத நிலையிலும்  சட்டம் இயற்றுபவர்கள் தொடர்ச்சியாக பல கடுமையான சட்ட திருத்தங்களை செய்தனர்.

சட்டத் திருத்தத்தில், நீடித்த சிறைத் தண்டனையும், 12 வயதுக்குக் குறைவானவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டனை எனவும் உள்ளது