5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில்  கொரோனா மண்டலவாரி பட்டியல்

சென்னை:

மிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக  3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டு உள்ளது

அதில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. ராயபுரத்தில் 7ஆயிரத்தை கடந்துள்ளது. இது மாநகர மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா தொற்றால் சூழப்பட்டு உள்ளது. நாளுக்கு அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பும் பலியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால்,  நோய்  பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 6951 பேரும் , தண்டையார்பேட்டையில் 5,717 பேரும், அண்ணா நகரில் 5,260 பேரும் தேனாம்பேட்டையில் 5,534 பேரும் , கோடம்பாக்கத்தில் 5,216 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7,000 ஐ நெருங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.