50% முடிந்தது 2.o !: ஷங்கர் அறிவிப்பு
கபாலிக்கு அடுத்து வெளியாக இருக்கும் ரஜினியின் 2.0 ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், “2.0 படத்தின் காட்சிகள், 100 நாட்களில் 50% முடிந்துள்ளதது. படத்தின் உச்சகட்ட காட்சிகளான ரஜினிகாந்த் நடிகர் அக்ஷய் குமார் மோதும் கிளைமாக்ஸ் உள்ளிட்ட இரண்டு சண்டை கட்சிகளையும் படமாக்கி விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் படப்பிடிப்பு தளத்தில் பேசி கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரஜினியின் உடல் நிலை குறித்து வதந்தி பரவி, ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நேரத்தில், ஷங்கரின் ட்விட் அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.