கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றும், இன்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குவிந்து வருகின்றனர். அதன் காரணமாக  படுக்கை இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந் நிலையில் 50 சதவீத படுக்கைகளை கொரோனாவால் நோயாளிகள் சிகிச்சைக்காக ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மற்ற சிகிச்சைகளுக்கு உள்நோயாளியாக அனுமதிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தனியார் மருத்துவமனைக்கு அறிவுறுத்தி உள்ளது.