நான்கே நாளில் ‘திரில்லர்’ நடிகையின் பெயரில் 50 போலி ட்விட்டர் அக்கவுண்ட்ஸ்…!

 

பிரபல நடிகைகள் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களை பற்றிய உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவிடப்படுவதும் அதுகுறித்து அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அடுத்ததாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரில்லர் –என்கிற ஆபாச படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அப்ஸரா ராணிக்கு இந்நிலை நேர்ந்துள்ளது .

இன்னும் படமே வெளியாகாத நிலையில் அப்ஸரா ராணிக்கு சோஷியல் மீடியாவில் 50க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது.

அந்த போலியான 50 கணக்குகளையும் தன்னுடைய உண்மையான சோஷியல் மீடியா கணக்கின் பெயரை சிவப்பு கலரில் வட்டமிட்டு இதுதான் என்னுடைய ஒரிஜினல் கணக்கு என்று குறிப்பிட்டுள்ளார் அப்ஸரா ராணி.

கடந்தவாரம் தான் ட்விட்டரில் அப்ஸரா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .