கேரளாவில் ‘பால் அபிஷேகம்’ போது விஜய் கட்அவுட் சரிந்து விபத்து! ரசிகர்கள் அதிர்ச்சி

டிகர் விஜயின்  சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. இதை கொண்டாடும் வகையில், கேரளாவில் உள்ள ரசிகர்கள் சுமார் 175 அடி உயரத்தில் கட்அவுட் அமைத்தனர். இந்த கட் அவுட் சரிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேலும் ஒரு 50 அடி கட்அவுட் சரிந்து விழுந்து சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்அவுட்டுக்கு  ரசிகர்கள் பாலாபிசேகம் செய்தபோது கட்அவுட் சரிந்து விபத்து ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்அவுட் வைத்த கேரளமாநில விஜய் ரசிகர்கள்மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொல்லத்தைச் சேர்ந்த கொல்லம் நண்பன்ஸ் விஜய் ரசிகர்கள் 175 அடி உயரத்தில் விஜய்யின் பிரமாண்ட கட் அவுட்டை வைத்துள்ளனர். எந்த நடிகருக்கும் இப்படியொரு பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டதில்லை. இதனை திறந்து வைத்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த கட்அவுட் சரிந்து விழுந்தது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள அட்டிங்கல் பகுதி மம்மாம் என்ற பகுதியில் உள்ள கங்கா தியேட்டர் காம்ப்ளக்சில் விஜய் சர்க்கார் படத்துக்காக வைக்கப்பட்ட சுமார் 50அடி உயர கட் அவுட் சரிந்து விழுந்தது.

நேற்று காலை காலை 5 மணியளவில் சிறப்பு காட்சியையொட்டி அந்த கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிசேகம் செய்தபோது, கட் அவுட் சரிந்து விழுந்து விபத்துஏற்பட்டது. தியேட்டர் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் தியேட்டரின் கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து  தொடர்பாக தியேட்டர் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, கட்அவுட் வைத்த  விஜய் ரசிகர்கள்மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.