புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.  புதுச்சேரியில் மார்ச்18ம் தேதி முதல் கடற்கரை சாலை மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு அறிவித்தது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி புதுச்சேரி கடற்கரை சாலை, பூங்காக்களை திறக்க முதலமைச்சர் நாராயணசாமி  ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 75 நாட்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் ஏராளமானோர் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

இந் நிலையில், திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் குபேர் அங்காடி நாளை முதல் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.50,000 கடனுதவி வழங்கவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.