சென்னை:

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும் 6 ஆக உயர்ந்துள்ளது. இது மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், டெல்லியை அடுத்துள்ள, நிஜாமுதீனில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அந்த மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம், அதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கா னோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த மாநிலத்தில் தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று புதியதாக 50 பேருக்கு  50பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 48பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91, 851. இது வரை 6 பேர் உயிர் இழந்து  இருப்பதாகவும் தமிழக  சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

இன்று உயிரிழந்தவர் 57 வயது பெண் என்றும், இவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  பெண் உயிரிழந்தார். இவர் வெளிநாடு எங்கும் சென்றிராத நிலையில்,   சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்து தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.