2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகித மக்கள் உயிரிழக்க கூடும் -ஆய்வு

இந்தியாவில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஐந்தில் ஒருவர் இறந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 2050ம் ஆண்டிற்குள் அரைப்பாதி மக்கள் இயற்கை பேரிடர்களால் அழிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood

1953 முதல் 2017 வரையிலான 64 ஆண்டுகள் காலப்பகுதியில் அதிக அளவிலான மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் உயிரிழந்தனர். மத்திய நீர்வளத்துறை ஆணையம் ராஜ்ய சபாவுக்கு மார்ச் 19ம் தேதி அளித்த தரவுகளில் இது தெரியவந்துள்ளது. ரூ. 365,860 கோடி மதிப்புடைய வீடுகள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தரவு கூறுகிறது.

இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணம் குறித்து ராஜ்ய சபா அளித்துள்ள விளக்கத்தில், குறுகிய காலத்தில் போதுமான வடிகால் அமைக்கப்படாதது, திட்டமிடப்படாத நீர்த்தேக்கங்கள் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் தான் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை மங்களூரு, மும்பை, ஜுனாகர் பகுதிகள் மழைபொழிவினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக அளவிலான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதே அளவு நீடித்தால் 2050ம் ஆண்டிற்குள் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மஹாரஷ்டிரா உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கினால் 1,600 பேர் உயிரிழப்பதாகவும், 32மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், 92,000 கால்நடைகள் உயிரிழப்பதாகவும், 7 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், ரூ.5,600 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக பிரம்மபுத்திரா, கங்கா, யமுனா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து ஏப்ரல் மாதம் லோக் சபா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள 20மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் 226 பகுதிகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.