வங்கியில் 50% வாராக்கடன்கள் அதிக அளவில் கடன் வாங்கிய 100 வாடிக்கையாளர்களுடையது

டில்லி

ங்கியில் உள்ள வாராக்கடன்களில் 50% அதிக அளவில் கடன் வாங்கிய  100 வாடிக்கையாளர்களால் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.  இந்த வாராக்கடன்களில் பெரும்பாலானவை கடன்களுக்கு ஈடு காட்டி உள்ள சொத்துக்களை விட அதிக அளவில் உள்ளது.   மொத்தம் உள்ள வாராக்கடன்களின் விவரங்கள் குறித்து  ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்படி அதிக அளவில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் வாராக்கடன்கள் 52% அளவுக்கு உள்ளது. அத்துடன் அந்த கடன்களில் 9.3% கடன்கள் முழுமையான வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது இந்த கடன்களுக்கு ஈடான சொத்துக்கள் இல்லை என்பதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி இந்த 100 வாடிக்கையாளர்களின் பெயர், கடன் வாங்கிய தொகை,  வட்டி விகிதம் போன்றவைகளை தெரிவிக்க மறுத்துள்ளது.   இந்த விவரங்களை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   வங்கிக் கடன் செலுத்தாதவர்களின் முழு விவரம் குறித்து வங்கிகள் தெரிவிக்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.