50 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து: தமிழக தேர்வுத்துறை அதிரடி

சென்னை,

மிழக தேர்வுத்துறை தமிகத்தில் 50 பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அந்த பள்ளிகளில் படித்துவரும்  மாணவ மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற ஏற்பாடு செய்ய தமிழக கல்வித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ,மாணவியர் எழுத இருக்கின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாத 50 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறையின்  தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக இந்த  பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு படித்து வரும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.