வீடியோவில் ஆபாசமாக தோன்றிய மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி.. வலைத்தளங்களில் வைரலாக பரவிய காட்சியால் ஆத்திரம்

 

தானே :

காராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியை சேர்ந்த ரபீக் முகமது யூனஸ், அங்குள்ள அன்சார்நகரில் மனைவியுடன் வசித்து வந்தார்.

விசைத்தறியில் வேலை பார்த்து வந்த ரபீக், ஊரடங்கு காரணமாக வேலை இழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, தனது 3 குழந்தைகளை அழைத்துகொண்டு, பிவாண்டியின் வேறு பகுதியில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

படங்கள் நன்றி : மும்பை மிரர்

இந்நிலையில் தனது மனைவி, அவரது ஆண் நண்பர் ஒருவருடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அண்மையில் பார்த்த ரபீக் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. . இதனால் அவமானம் அடைந்த ரபீக், மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்று அவருடன் சண்டை போட்டுள்ளார். மேலும் ஆத்திரம் தணியாமல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டார்.

பின்னர் சாந்திநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த ரபீக், மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து, அவமானம் அடைந்து, அவரை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

ரபீக்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

– பா. பாரதி