நோட்டு தடை:, நல்ல நடவடிக்கை; விஜய்யும் வரவேத்துட்டாரு!

சென்னை,

ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது நல்ல நடவடிக்கை என்று நடிகர் விஜய்  வரவேற்றுள்ளார். அதே நேரம், இதனால் பெரும ்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி உத்தரவிட்டதை ரஜினி, கமல், தனுஷ் உட்பட சினிமா நட்டத்திரங்கள் வரவேற்றார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்யும் இந்த நடிவடிக்கையை வரவேற்றுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

“கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனும் பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது” என்று   அவர்  தெரிவித்துள்ளார்..

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய், ‘500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை நோக்கம் நல்லது.  இதுவரை யாரும் எடுக்காத துணிச்சலான ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்கத்தக்கது  ஆனாலும்  அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் பெரிது “ என்று தெரிவித்துள்ளார்.