500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம்!

cont

சென்னை,

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின்  அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர்களான தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கம்யூனிஸ்டு தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன் உடன் ரவிக்குமார்
கம்யூனிஸ்டு தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன் உடன் ரவிக்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கம்யூனிஸ்டு கட்சிகள் தமிழக தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருடன்  விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் முன்னணி நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

மக்கள் நலக்கூட்டணியை சார்ந்த (மதிமுக தவிர) நூற்றுக்கணக்கான  கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டனர்.

விடுதலைசிறுத்தை தலைவர் திருமாவளவன் மற்றும் முன்னணியினர்
விடுதலைசிறுத்தை தலைவர் திருமாவளவன் மற்றும் முன்னணியினர்

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக, மதிமுக, பாரதியஜனதா கட்சி தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை, ஆம்ஆத்மி கட்சிகள்  அனைத்தும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.