500-1000 செல்லாது: மத்தியஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு!

டில்லி,

ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதி மன்றம் தலையிடாது என்று கூறி உள்ளது.

கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்த்ர்.  கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

supreme

தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும்றி அவிக்கப்பட்டது.

கடந்த 10ந்தேதி முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக மக்கள்  வங்கிகள், தபால் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக, விவேக் நாராயண், சங்கம்லால் பாண்டே ஆகிய வழக்கறிஞர்கள், மத்தியஅரசின் பணம் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

rupees

அப்போது, நீதிபதிகள்,  மத்திய அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது என கூறி, ரூபாய் நோட்டு குறித்த அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க  மறுத்துவிட்டனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுகுறித்து ஏற்கனவே மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 500-1000 void:, 500-1000 செல்லாது:, central govt., Denial, Inida, order, suprme court, இந்தியா, உத்தரவுக்கு, சுப்ரீம்கோர்ட்டு, தடை விதிக்க, மத்தியஅரசின், மறுப்பு
-=-