சென்னை:

மிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏசி பேருந்துகள் உள்பட  500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்ச்ரகள், அதிகாரிகள் முன்னிலையில், புதிய பேருந்துகளை எடப்பாடி  எடப்பாடி  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட பேருந்துகளில், சென்னையில் இருந்து வேலூர் மற்றும் திருவண்ணா மலைக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில்முதல் பயணத்தில் மட்டும் கட்டணம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குளிர்சாதன பேருந்தில், சாதாரண பேருந்துகள் போலவே 3+2 இருக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பயணிகள் வசதிக்கு ஏற்ப குளிர் சாதன வசதியை மாற்றியமைக்க வசதி, எல்.இ.டி. விளக்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அத்துடன்,  செல்ஃபோன் சார்ஜர் வசதி, காற்றுப் போக்கி, அவசரகால வழி, முன் – பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை ரிமோட் மூலம் இயக்க வசதி, பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது தடை இருந்தால் எச்சரிக்கும் சென்சார் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்தப் பேருந்துகளில் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேருந்துகளில்,  சென்னைக்கு 8 பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் கோட்டத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 316 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.